Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கே… இளைஞர்களின் புது முயற்சி… சிறுவர்களின் கருத்து…!!

முழு ஊரடங்கு காரணத்தினால் சலூன் கடை இல்லாததால் இளைஞர்கள் தாங்களாகவே முடி வெட்டி கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து சலூன் கடைகளும்  மூடப்பட்ட நிலையில் இளைஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து முடி அதிகம் வளர்ந்த நிலையில் தலைமுடியை வெட்டிக் கொள்ள கடைகளும் இல்லாததால் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி முடியை வெட்டிக்கொள்ள தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பல கிராமங்களில் உள்ள சிறுவர்கள் முடியை வெட்டிக் கொள்வதைக் காண முடிகிறது.

இந்த வகையில் பாப்பிசெட்டிபட்டி, கௌகம்பட்டி, பெத்தூர் ஆகிய பகுதிகளுக்கு உள்ளிட்ட பல கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் மாறி மாறி முடி வெட்டிக் கொள்கின்றனர். இது குறித்து அச்சிறுவர்கள் கூறும் போது ஊரடங்கு நீடித்துக் கொண்டே செல்வதால் கடைகள் திறக்காததால் எங்கள் தலையில் முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் நாங்களே ஒருவர் மற்றொருவருக்கு முடிவெட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சலூன் கடைகளை திறக்க வில்லை என்றாலும் கிராமப்புறங்களில் இளைஞர்களை முடிவெட்டி கொள்கின்றனர்.

Categories

Tech |