பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மெகுல் சோக்சிக்கு டொமினிக்காவின் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு ஆண்டிகுவா தீவில் தலைமறைவானார். அதன்பின்பு அங்கிருந்து, கடந்த மாதம் 23ஆம் தேதியன்று டொமினிக்காவிற்கு படகு வழியாக தப்பிச்சென்றார். அப்போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து மெகுல் சோக்சி சார்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை டொமினிக்கா மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்பு டொமினிக்காவின் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரப்பட்டது. தற்போது உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கினால் பிற நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்பிருப்பதாக கூறி மறுத்துவிட்டது.