உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி-7 உச்சி மாநாடு நிகழ்வில், பிரிட்டன் மகாராணியார் வாளால் கேக் வெட்டியுள்ளார்.
இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் இருக்கும் கார்பிஸ் பே என்ற ஓட்டலில் 47 வது உச்சி மாநாடு நேற்று ஆரம்பித்தது. இந்த ஜி-7 அமைப்பானது, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இயங்குகிறது.
இந்த நிகழ்வில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்துடன், அவரின் மகன் இளவரசர் சார்லஸ் மனைவி கமிலா, பேரன் இளவரசர் வில்லியம் போன்றோரும் பங்கேற்றுள்ளனர். மகாராணியார் தன் கணவரான இளவரசர் பிலிப் மரணத்திற்கு பிறகு குடும்பத்துடன் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாகும்.
ஜி-7 கூட்டமைப்பின் தலைவர்கள் மகாராணியுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது மகாராணியார் கேக் வெட்டினார். அதை வாள் வைத்து வெட்டியது, மேலும் சிறப்பான நிகழ்வாக அமைந்துள்ளது.