Categories
மாநில செய்திகள்

அற்புதம்மாளின் கண்ணீரை…. எப்போது துடைக்க போகிறோம் – கமல் டுவீட்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி இன்று ட்விட்டரில் இன்று பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலைக்காக அற்புதம்மாள் அனுபவித்த துயரம் குறித்து மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் டுவீட் செய்துள்ளார். அதில், மகனை மீட்க உலகின் அத்தனை கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த  அற்புத தாயின் 30 ஆண்டு கண்ணீரை எப்போது துடைக்க போகிறோம்? என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |