Categories
தேசிய செய்திகள்

குழந்தை தொழிலாளர் சம்பவங்கள்…. தொடர்பாக இந்த எண்ணில் புகார் கொடுங்க…!!!

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு 2002ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தை தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் தளம் அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். இல்லையெனில் குழந்தை தொழிலாளர்கள் முறை சம்பவங்கள் தொடர்பாக  https://pencil.gov.in/ என்ற பென்சில் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |