Categories
உலக செய்திகள்

“தண்ணீர் இருக்கும் புதிய கோள் கண்டுபிடிப்பு!”.. நாசா விஞ்ஞானிகள் அசத்தல்..!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, பூமியிலிருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தூரத்தில் டிஓஐ 1231 பி’ (TOI-1231 b) என்ற ஒரு புதிய கோள் ஒன்றை கண்டறிந்துள்ளது.

டிஓஐ 1231 பி என்ற இந்த புதிய கோளானது, பூமியை காட்டிலும் சுமார் மூன்றரை மடங்கு பெரிதாகவும் நெப்டியூன் கோள் போன்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். மேலும் அதிலும் பூமியை போன்று மேகங்களும் தண்ணீரும் உள்ளதாக கூறுகிறார்கள். ‘ரெட் டுவார்ஃப்’ என்ற சிவப்பு குள்ளன் நட்சத்திரத்தை இந்த கோளானது சுற்றி வருகிறதாம்.

ஆனால் இந்த சிவப்பு குள்ளன் கோள், சூரியனைக் காட்டிலும் சிறியதாகவும், வயது அதிகமாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குளிரான பகுதியாக இருப்பதால், தற்போது கண்டறியப்பட்ட இந்த கோளும் குளிர்ச்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தட்பவெப்பத்தை அறிவதற்காக பார்கோட் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் ஹைட்ரஜன் வாயுவின் அணுக்கள் இக்கோளில் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது நாசா விண்வெளி நிலையத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜெனிபர் பார்ட் என்பவரின்  தலைமையிலான குழு இக்கோளை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |