கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் காவல்துறையினர் போரூர் பிரிவு ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செக்குமேடு பகுதியில் வசிக்கும் அருள் மற்றும் அதிபதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 100 கர்நாடக மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.