உலகம் முழுவதுமாக கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். மற்றவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் என்னவோ தடுப்பூசி போட முன்வருவதில்லை. இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தானின் பஞ்சாபில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோஸை 3 லட்சம் பேர் செலுத்தி கொண்டனர். ஆனால் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள யாரும் முன் வரவில்லை என்பதால் போட்டுக் கொள்ள முன்வராதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என்று பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.