தென்னலக்குடி உப்பனாற்றை சரியான முறையில் தூர்வார விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் 65 கோடி ரூபாய் செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்றை தூர்வார கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆற்றை சரியான முறையில் தூர்வாராமல் பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி திடீரென ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மழை வெள்ள காலங்களில செம்பதனிருப்பு, காத்திருப்பு, தென்னங்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடிகாலாக இந்த கூப்பிடுவான் உப்பனாறு திகழ்கின்றது. இந்த உப்பனாற்றை சரியான முறையில் தூர் வாராததால் மேற்கண்ட கிராமங்களில் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே உப்பனாற்றை சரியான முறையில் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.