கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய உள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இன்றும் நாளையும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அந்தந்த மாவட்டங்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் வருகிற 15-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.