Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : திடீரென்று மயங்கி விழுந்த வீரர் …! சுயநினைவை இழந்ததால் பரபரப்பு …!!!

டென்மார்க் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் போட்டியின் போது திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் டென்மார்க்- பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில், டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டின் எரிக்சன் திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மைதானத்திலேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் கண்விழித்து விட்டதாகவும்,  மேலும் அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார் என்று டேனிஷ் கால்பந்து யூனியன் தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் போட்டி தொடங்கியது. இதில்  பின்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Categories

Tech |