Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம்?…. அரசு அதிரடி…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கும் விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பலியானவர்கள் குடும்பத்திற்கு தேசிய அல்லது மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Categories

Tech |