தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நிதித்துறையில் இரண்டு புதிய பணியிடங்களை உருவாக்கிய தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதியர்கள், ஓய்வூதியர்களின் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை கவனிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.