உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அழகு என்பது மிக முக்கியம். பெண்கள் அனைவரும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அவற்றில் முக அழகு என்பது முக்கிய இடம் பிடிக்கிறது. முகத்தில் கண்ணிமைகள் நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்காரா உள்ளிட்ட வண்ண பூச்சிகளை நவீனகால யுவதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யு ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்காக தொடர்ந்து அவற்றை வளர்த்து வந்துள்ளார்.
இது பற்றி கூறியுள்ள அவர், எனக்கு ஏன் இவ்வளவு நீண்ட கண் இமைகள் இருக்கின்றன என நான் பலமுறை யோசித்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியில் 480 நாட்கள் வரை வசித்து வந்தேன் என்று அவர் கூறியுள்ளார். கண்ணிமைகளை ஊசி போல நீட்டிக் கொள்கிறார். உலகின் மிக நீண்ட கண் இமைகள் கொண்ட பெண் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மேலும் இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.