Categories
மாநில செய்திகள்

காபி-டீ கடைகளை திறக்க அனுமதி வேண்டும்…. தமிழக அரசுக்கு கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் காபி டீ கடைகளை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டீ காபி கடைகளை திறக்க அனுமதிக்காததால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காபி மற்றும் டீ கடைகளை திறக்க தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரை காபி டீ வர்த்தகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உள்ளபோதிலும் தேநீர் கடைகளை திறக்க அனுமதி தராதது காபி கடை உரிமையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |