தேனியில் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக எண்ணி கூலித்தொழிலாளியை கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின் காவல்நிலையத்தில் கொலை குற்றத்திற்காக சரணடைந்த அவரை காவல்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு உள்ளதாக எண்ணி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.பின் அவர் மனைவியிடம் விசாரித்த போது தான் தெரிந்தது அப்படி உறவு ஏற்படவேயில்லை என்று. இந்நிலையில் இன்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் பால்பாண்டி மற்றும் அவரது நண்பர் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .