Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான புத்தகங்களை அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கான 3 கோடியே 70 லட்சம் பாடநூல்கள் தயார் நிலையில் உள்ளன. மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் ஆகியவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |