ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயில் படிக்கட்டில் 50 வயதுடைய ஒரு ஆண் பயணம் செய்துள்ளார். அப்போது ஆம்பூர்- விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருக்கும் போது அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்