சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து தப்பிஓடிய ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓடைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் கோவில் பாளையத்தில் வசிக்கும் சின்னையன் என்பதும், அவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக சின்னையனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.