Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெற்றோரை இழந்த குழந்தைகள்…. இந்தியன் ரெட்கிராஸ் சங்கம்…. கலெக்டரின் அதிரடி…!!

பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளுக்கு அன்றாட தேவைகளை ரெட்கிராஸ் சங்கம் ஏற்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி எழில்நகரில் சிவராஜ்- பாமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திபேஷ்ராஜ், பிரித்விராஜ் என்று 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சிவராஜ் என்பவர் மதுபான கடை ஊழியராக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 மகன்களும் மதுபானம் நிர்வாகம் மூலம் இழப்பீடு தொகை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் 2 மகன்களையும் சந்தித்து பழங்கள், தின்பண்டங்கள், நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். இதனையடுத்து அவர் சிவராஜ்- பாமா என்ற தம்பதியினரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைதொடர்ந்து பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளுக்கும் மாதந்தோறும் 3 ஆயிரம்  ரூபாய் உதவித் தொகையும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்களை அளித்தல், இரண்டு குழந்தைகளின் கல்வி, மருத்துவம், அன்றாட தேவைகள், பண்டிகை காலத்தில் புத்தாடை, விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகள் வசிக்கும் வாடகை வீட்டிற்கு மாதம்தோறும் வாடகை ஆகியவற்றை இந்தியன் ரெட்கிராஸ் சங்க வேலூர் மாவட்ட கிளை ஏற்கும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் குழந்தைகளின் சித்திக்கு நர்சிங் உதவியாளர் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது கோட்ட மதுகடை பொதுமேலாளர் கீதாராணி, இந்திய ரெட்கிராஸ் சங்க கிளைச் செயலாளர் பி.டி.கே மாறன், பொருளாளர் உஷா நந்தினி, தலைவர் உதயசங்கர், மேலாளர் தீபன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |