அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் ஓடியுள்ளனர். ஆனால் அந்த மர்ம நபர் விடாது தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மொத்தமாக 13 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் படுகாய அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் யார் என்று விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் எதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என்பதையும் விசாரணை செய்து வருகின்றனர்.