மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்ச 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகா காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அக்ராவரம் பூங்குளம் மலைப்பகுதி மற்றும் எரிப்பட்டரை ஆகிய இடங்களில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் காவல் படையுடன் சென்றுள்ளார். அங்கு காவல் வாகனம் செல்ல முடியாத பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சாராயம் காய்ச்சும் இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அதிரடி சாராய ஊறல் அழிப்பில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அங்கு வெல்லம் தயாரிக்கும் கொப்பரையில் இருந்த சாராய ஊறல்களையும் தொடர்ந்து பல இடங்களில் இருந்த 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் போலீஸ் சூப்பிரண்டு அழித்துள்ளார். இந்த அதிரடி சோதனையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், வெங்கடேசன், காவலர்கள் வினோத்குமார், மஞ்சுநாத், பிரேம் குமார் ஆகியோர் இருந்தனர். மேலும் சாராயம் காய்ச்சும் முக்கிய நபர்களான முருகன் மற்றும் சம்பட்டி சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.