அமெரிக்காவில் நடுவானில் பயணித்து கொண்டிருந்த விமானத்தில் ஒருவர் திடீரென கதவை திறக்க முயற்சி செய்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ்-ன் 1730 என்ற பயணிகள் விமானமானது அட்லாண்டாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது விமானி அறைக்கு அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென விமானத்திலிருந்து வெளியேறுவதற்கான கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்த நிலையில் சிலர் மட்டும் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து ஓக்லஹோமா என்ற விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
UPDATES: According to a passenger the man who tried to take down the Delta airlines 1730 was apparently a flight attendant
— Insider Paper (@TheInsiderPaper) June 12, 2021
மேலும் அந்த நபர் டெல்டா நிறுவனத்தில் பணிபுரியும் விமான ஊழியர் என்பதை அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின் அதிகாரிகள் விமானத்திற்குள் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் அந்த விமானம் அட்லாண்டாவுக்கு புதிய விமான குழுவினருடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது.