சென்னையைச் சேர்ந்தவர் துணை நடிகர் தங்கராஜ். அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவருடைய சித்தப்பா கணேசன் கொடுத்த புகாரில் காவல்துறையினர் தங்கராஜை கைது செய்துள்ளனர்.
மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகர் தங்கராஜ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் தங்விசாரணையில், அவருடைய மனைவி ஜெயலெட்சுமியின் போனை ஆய்வு செய்ததால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், ஜெயலட்சுமியை செத்து போய்விடு என்று அடிக்கடி கூறி சண்டையிட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.