குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் கனி டைட்டிலை வென்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.