Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த தொண்டர்… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் ராகுல்காந்திக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தேசிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு வந்தனர்.

Image result for rahul gandhi kiss

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.இதையடுத்து பார்வையிட்ட பின் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ராகுல்காந்தி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இளைஞர் ஒருவர் ராகுல் காந்திக்கு முத்தம் தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்  அவர் ராகுல் காந்திக்கு  முத்தம் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Categories

Tech |