Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்… திருமாவளவன் பேட்டி..!!

அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் இது நடந்து இருக்கிறது என்று உறுதிபட தெரிகிறது என்று கூறிய அவர்,

Image result for திருமாவளவன்

அரசின் மெத்தன போக்கு மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை உடைப்பு ஆகியவற்றை கண்டித்து செப்டம்பர் 3 சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்தது பேசிய அவர், பழிவாங்கும் நடவடிக்கையாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். சிதம்பரத்தை கைது செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்திவிடலாம் என்று மோடி அரசு நினைப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |