Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை அடுத்த காந்தாரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியப்பிரியன் அங்குள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சத்தியப்பிரியன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஒரு காரில் வந்துள்ளார். அப்போது காலை சாப்பாடு வாங்குவதற்காக சத்தியப்பிரியன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு ஓட்டலுக்கு காரில் சென்றுள்ளார்.

இதனையடுத்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்ற போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியப்பிரியன தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |