Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதுக்கு இப்படியா பண்ணனும்…. கோவில் பூசாரிக்கு நடந்த கொடூரம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

கோவில் பூசாரியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மனோகரன் தைலாவரம் அம்பேத்கர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகியாகவும் இருக்கின்றார். எனவே கோவில் எதிரில் இருக்கும் மேற்கு பக்கமுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக ஏற்கனவே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மனோகரன் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் மனோகரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கண்ணன் சாமிக்கு பூஜை செய்து விட்டு எலுமிச்சை பழத்தை சுற்றி கோவில் வெளியே போட்டதனால் ஆத்திரமடைந்த சுந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனையடுத்து கோவில் பூசாரி கண்ணன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பூசாரியை அரிவாளால் வெட்டிய சுந்தரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |