Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்க போனாலும் விடமாட்டோம்… கண்டிப்பா போட்டே ஆகணும்… மருத்துவர்களின் தீவிர பணி…!!

மலைவாழ் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

கொரோனா தொற்றின் 2- வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் தலைமை மருத்துவர் சம்பத் முன்னிலையில் மருத்துவ குழுவானது அமைக்கப்பட்டு மலைவாழ் மக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்றது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதனால் மருத்துவர்கள் அந்த இடத்திற்கே சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசியை போட சென்றுள்ளனர். அதனைப் பார்த்ததும் மலைவாழ் மக்கள் பயந்து ஓடியுள்ளனர். ஆனாலும் மருத்துவ குழுவினர் பொதுமக்களை மடக்கிப் பிடித்து தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இவ்வாறாக 100 – க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு  ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Categories

Tech |