Categories
உலக செய்திகள்

சர்வாதிகார ஆட்சி எங்களுக்கு வேண்டாம்…. அலறல் ஒலியெழுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொதுமக்கள்…. ஐரோப்பிய நாடாளுமன்றத்தை அலற வைத்த நடிகர்….!!

பெலாரஸ் நாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணைய கட்டிடத்தின் முன்பாக போலந்து வாழ் பெலாரஸ்யர்கள் தினந்தோறும் ஒன்று கூடி அலறல் ஒலியை எழுப்பி வருகின்றனர்.

பெலாரஸ் நாட்டில் 26 ஆண்டுகளாக லுகாஷென்கோ என்பவர் அதிபராக இருந்து வருகிறார். இவரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் பெலாரஸ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் லுகாஷென்கோவே 80 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பதவியை பிடித்துள்ளார். இதனால் போராட்டங்கள் மீண்டும் வெடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் பெலாரஸின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி போலந்திலிருக்கும் ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடம் முன்பு போலந்து வாழ் பெலாரஸ்யர்கள் கூட்டமாக கூடியுள்ளனர். மேலும் இந்தக் கூட்டத்திலிருக்கும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய உரையை முடிக்க ஒட்டுமொத்தமாக அனைவரும் அலற தொடங்குகின்றனர். அதன்பின் அனைவரும் பெலாரஸின் அதிபருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்புகின்றனர்.

இதனையடுத்து தினந்தோறும் இந்தக் கூட்டம் ஐரோப்பிய ஆணைய கட்டிடத்தின் முன்பாக ஒரு நிமிடம் அலறல் ஒலியை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்பாக போலந்து நடிகர் ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதை பெற்ற நடிகர் ஐரோப்பிய ஆணைய கட்டிடத்தின் முன்பாக ஒலி எழுப்பும் பெலாரஸ்யர்களுக்கு ஆதரவாக ஒரு நிமிடம் அலறல் ஒலியை எழுப்பியுள்ளார்.

Categories

Tech |