கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 9,900 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 72 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியபோது 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 21,030 நபர்களும், இணை நோய் உள்ளவர்கள் 43,712 நபர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 46,100 நபர்களும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 41,481 நபர்களும் இதுவரை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதனையடுத்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 9,900 நபர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர் என்றும் இதுவரையிலும் 2 லட்சத்து 50 ஆயிரத்து 875 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.