Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி இயங்கிய ஜீப்… விடாமல் துரத்திய யானை… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானை ஜீப்பை வழிமறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மூனுகுட்டை, கோபனாரி போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கோபனாரியில் இருந்து அங்கு வசிக்கும் மக்கள் ஜீப்பில் மூணுகுட்டை நோக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென ஒரு காட்டு யானை இந்த ஜீப்பை வழிமறித்துள்ளது. இதனால் அச்சத்தில் ஜீப்பை டிரைவர் பின்னோக்கி இயக்க காட்டு யானையும் துரத்தி ஓடி வந்துள்ளது.

அதன் பிறகு சுமார் 1 1/2 மணி நேரம் அங்கேயே நின்று விட்டு அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அட்டகாசம் செய்யும் யானையை துரத்தி விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |