Categories
உலக செய்திகள்

ஜனாதிபதிக்கே அபராதமா…? யாரு செஞ்சாலும் தப்பு தப்புதான்…. கடுமையாக பின்பற்றப்படும் கொரோனா விதிமுறைகள்….!!

பிரேசில் நாட்டின் ஜனாதிபதி முகக்கவசமின்றி சைக்கிள் பேரணியை துவங்கி வைத்ததால் அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

பிரேசில் நாட்டின் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ தலைமையில் சாவ் பாலோ என்னும் நகரத்தில் “Accelerate For Chirst” என்னும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றுள்ளது. இந்தப் பேரணியில் பலரும் தங்களுடைய மோட்டார் சைக்கிளுடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த வேளையில் பிரேசில் நாட்டு ஜனாதிபதி முககவசமின்றி, ஒரு ஹெல்மெட்டை மட்டும் அணிந்து கொண்டு இதனை துவக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியான போல்சனாரோ கொரோனா தடுப்பிற்காக போடப்பட்ட மாநில சுகாதார விதிகளை மீறியதாக கூறி அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் 100 டாலரை அபராதமாக விதித்துள்ளது. இதனையடுத்து அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை சந்திப்பதற்காக பிரேசில் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வரும் ஜனாதிபதி, சாவோ பாலோவில் ஆளுநரான ஜோவா டோரியாவின் முன்பாக மாநில விதிமுறைகளை மீறி பொது இடத்தில் முக கவசமின்றி பேரணியை துவக்கி வைத்ததால் தான் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |