கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பிரே வடிவிலான திரவநிலை தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் பல விதமான தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்பிரே வடிவிலான திரவநிலை தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த திரவநிலை தடுப்பு மருந்தை மூக்கில் அடித்து, அதனை உள்ளிழுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தடுப்புமருந்து நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கிறது.
இந்த திரவ நிலை தடுப்பு மருந்தை சீன ராணுவ அறிவியல் அகாடமியின் மேற்பார்வையில் ராணுவ மருத்துவ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்து இதுவரை பரிசோதனையிலேயே உள்ளது. இதனையடுத்து திரவநிலை தடுப்பு மருந்து கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படுமானால் இதனை பொது மக்களுக்கு விநியோகிக்க சீன அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது.