Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… இரட்டை மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேலும் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது நேற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மிக குறைவு ஆகும். இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் 25 ஆயிரத்து 895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 267 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,895 ஆகவும் ஈரோட்டில் 1,323 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேநேரம் சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. அதன்படி சென்னையில் மட்டும் ஒரே நாளில் 935 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |