கொலம்பியாவில் சவப்பெட்டியில் வைத்து 300 கிலோ கஞ்சா கடத்திய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
கொலம்பிய நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கு சட்டத்திற்கு விரோதமாகவும் சிலர் கஞ்சாவினை பயிரிட்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். அதன்படி சமீபத்தில் போலீசார் பாம்லோனா – குக்கூட்டா (ucuta) சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக ஒரு கார் வந்தது.
அதனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதற்கு பதிலளித்த கார் ஓட்டுநர் காருக்குள் சவப்பெட்டி இருப்பதாக அவர்களிடம் கூறினார். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார் சவப்பெட்டியை ஒரு தனி நபர் ஏன் எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணி அதனை திறந்து சோதனையிட்டனர். அப்போது தான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது . பெட்டியின் உள்ளே பொட்டலம், பொட்டலமாக 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த கார் டிரைவரை கைது செய்த போலீசார், கடத்தல் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.