அமெரிக்க அரசின் புலிட்ஸர் என்ற ஊடக துறைக்குரிய உயர்ந்த விருதிற்காக இந்த வருடம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஊடகத் துறையில் மிக உயர்ந்த விருதான புலிட்ஸர் விருதை இந்த வருடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலன் பெறுகிறார். இவர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தடுப்பு முகாம் தொடர்பில் புதிய விதமாக செய்திகளை வெளியிட்டதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மற்றொரு இந்திய வம்சாவளியினரான நீல் பேடி என்பவரும் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது வருங்காலத்தில் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களை கணினி வாயிலாக கண்டறிவதற்கான முயற்சிகளை, உள்ளூர் காவல் அலுவலகம் மேற்கொண்டது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.