Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கடமையை செய்ததால்… பெண் பயற்சி மருத்துவர் மீது தாக்குதல்… உறுதி அளித்த காவல்துறையினர்…!!

மருத்துவமனையில் சிகிக்சை பெரும் நபரின் உறவினர்கள் பெண் பயற்சி மருத்துவரை தக்க முயன்றதால்  தர்ணா போராட்டத்தில் பயற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நவலை பகுதியில் வசிக்கும் கீர்த்தனா என்ற பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு பிரசவம் முடிந்த பிறகு வயிற்றில் சிறிய குழாய் பொருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் கீர்த்தனா உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதினால் அவர் வயிற்றுப் பகுதியில் இருந்த குழாயை அந்நேரத்தில் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் அகற்றி உள்ளதாகவும் அதனால்  வலி தாங்காமல் கீர்த்தனா சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பயிற்சி மருத்துவரிடம் கீர்த்தனாவின் உறவினர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது பயிற்சி மருத்துவர் கொரோனா தொற்று பரவி வருவதால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு உறவினர்கள் எவரும் வரக்கூடாது என்று கூறியுள்ளார். அதன் பின்னர் தனது பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பெண் பயிற்சி மருத்துவரிடம் கீர்த்தனாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற பயிற்சி மருத்துவர்கள் திடீரென்று அங்கே திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பெண் பயிற்சி மருத்துவரை தாக்கம் முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் மருத்துவர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அளித்த உறுதி காரணத்தால் பயிற்சி மருத்துவர்களின் தர்ணா போராட்டம் முடிவு பெற்றுள்ளது.

Categories

Tech |