திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 21 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று முன்தினம் வரை 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஏழு பேர் பெண்கள் ஆவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேரும், திண்டுக்கல் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இறந்தவர்களில் 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் எட்டு பேரும், 50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் 9 பேரும், 70 வயதுக்கு மேல் மூன்று பேரும், 36 வயது பெண் ஒருவரும் அடங்குவர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 512 ஆக அதிகரித்துள்ளது.