இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஜூன் 23 ம் தேதியும் , 2 வது போட்டி ஜூன் 24 தேதியும் கார்டிஃபில் நடைபெறுகிறது. அதோடு 3 வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 26ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிறிஸ் வோக்ஸ் 2015 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது நடக்க இருக்கும் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் கூறும்போது, “அணியில் கிறிஸ் வோக்ஸ், டேவில் வில்லே இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால், வலுவான அணியை பெற்றுள்ளோம்” என்று அவர் கூறினார்.
இங்கிலாந்து டி20 அணி :
ஈயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் , சா்ம கர்ரன், ஜோஸ்ட் பட்லர், லியம் டாசன், தாவித் மலான், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் லியம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான் , ஜேசன் ராய், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ்.