நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 50 சதவீத வேலை ஆட்களோடு இயங்கும் என்று அறிவித்த நிலையில், மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 50 சதவித பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி. ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்சிகள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதி அளித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.