Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகள்…. எவற்றிற்கெல்லாம் அனுமதி…???

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேநீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

கட்டுமான நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

அரசு அலுவலகங்களில் செயகப்படும் இ-சேவை மையம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |