Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தேநீர் கடைகள் திறக்க அனுமதி…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று  முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்யலாம். பார்சல் முறையில் தேனீர் பெற மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்ல வேண்டும். கடைகளின் அருகே நின்று மக்கள் தேநீர் அருந்த அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |