இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடனம் ஆடிய ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ரூ . 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது .
இந்தி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வரும் நிலையில், தற்போது அவருக்கு கவர்ச்சி பாடலில் நடிக்க பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தில் படுகவர்ச்சியாக நடனமாட வேண்டும் என படக்குழு அவர்களிடம் கேட்டுள்ளது .
பின்னர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் இதில் நடிக்க ஓப்புக்கொண்டார் . அதன்பின், அவர் சாஹோவில் பிரபாசுடன் பேட் பாய் எனத்தொடங்கும் பாடலில் ஆடியுள்ளார். இந்த படுகவர்ச்சி நடனத்திற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி சினிமாவின் வியாபாரத்தை குறிவைத்தே இந்த கவர்ச்சி பாடலில் அவரை நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது .
.