Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான டெல்லியில் இன்று  முதல் வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தலைநகரில் அனைத்து வணிக வளாகங்களும் திறந்திருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |