தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் முதல்வர் ஊரடங்கு தொடர்பான முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டால் அதற்கு தயார் நிலையில் உள்ளோம். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பிறகு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.