Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை?…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. மேலும் ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார்.

Categories

Tech |