Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியை ஏன் நிறுத்திட்டீங்க… எங்களுக்கு புதுசா வேணும்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று நகரின் பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள டி.டி. தினகரன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த நகரில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் வாகனங்களில் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின் படி டி.டி. தினகரன் சாலையில் தீவிரமாக பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பின்னர் அந்த நகரை சேர்ந்த ஒருவர் நகராட்சி நிர்வாகத்திடம், டி.டி. தினகரன் நகரிலுள்ள சில அளவு பகுதி தனக்கு சொந்தமானது எனவும் அந்த குறிப்பிட்ட பகுதியில் தார்சாலை அமைக்க கூடாது எனவும் புகார் அளித்துள்ளார்.

இதனால் அங்கு நடைபெறும் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை நிர்வாகிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த நகரின் ஏற்கனவே இருந்த சாலையின் அளவுபடி புதிய சாலை அமைத்து தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |