தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் பொது போக்குவரத்து மற்றும் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு விதிகளை பின்பற்றிய மக்களுக்கு நன்றி. தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என மக்கள் அலட்சியமாக சுற்றித் திரிய வேண்டாம். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா பரவலுக்கு இன்னும் முழுமையாக முற்றுப் புள்ளி வைக்கப்பட வில்லை என்று அவர் கூறியுள்ளார்.